Call for Submission: Tamil LGBTQQ Zine & Blog

What will People Say: A collective of Tamil LGBTQQ people & allies

Call for Submissions

You are invited to submit a creative piece to the “What Will People Say” Collective. The Collective aims to provide a platform for LGBTQQ Tamils to share our stories, encourage individual and collective art-making, create a supportive community, organize cultural resistance to oppression. We are creating a bilingual (English/Tamil) zine and a blog as spaces to share the stories, experiences and dreams of LGBTQQ people safely and anonymously. We are looking for submissions from Tamils of all ages who identify as LGBTQQ for the zine and the blog. We are looking to centre the voices of people who self-identify as Tamil  and who also have origins in Eelam, Sri lanka, Ceylon, and the island who live in the global diaspora. Send us your story, comic, poetry, drawing or video! We launch the Zine in the Winter.

Some suggested topics/prompts are (but topics are not limited to):

-Family acceptance/rejection of sexuality, gender identity and expression

-Making connections within the larger LGBTQQ communities

-Isolation, racism within and outside our communities

-Stories about allies in Tamil communities

-Dating, sex, love, relationships

-Trauma and collective healing related to the conflict and/or immigration or exile

-Spirituality in all its forms

Here’s how to submit:

For all Media

Please include the title, a short artist statement (100 words max) and an artist name you would like associated with the art (can also be a pen name) via e-mail to whatwillpeoplesay@gmail.com. Please put ” What Will People Say zine submission” in the email subject line.

*If you would like to remain anonymous please make sure any identifying information, like names of people in your art is changed.

Written Format:

Written pieces should be no more than 250 words, 12 point type, and Arial font; as a word .doc

Audio/Video Format:

Audio/Video format should be no more 3 minutes.  Send a link or file as mp3 or wav (24bit/48khz) or mp4 and mov not larger than 1920 x 1080.

Visual Arts:

Please send as a jpg file in no larger than 1920×1080 resolution.

If you find any of these formats confusing please email us!

For more information please contact

What will People Say Collective:

Whatwillpeoplesay15@gmail.com

whatwillpeoplesaycollective.wordpress.com/

“What will People Say,” is a diverse collective of Tamil LGBTQQ (Lesbian gay bi trans queer and questioning) people and some non-LGBTQQ identified allies. We meet monthly in person and online. We want to start opening up spaces for queer and trans people in our communities by having conversations, teach-ins and fun gatherings that involve youth, adults and elders.

Thanks to Thamilini and her sister for the translation.

படைப்பாக்கங்களுக்கான அழைப்பு! மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் சிற்றிதழ்

What will People Say: மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு, பாலடையாளமுள்ளோர் மற்றும் தோழர்களின் கூட்டியக்கம்

படைப்பாக்கங்களுக்கான அழைப்பு!
What Will People Say கூட்டியக்கம் படைப்பாக்கங்களை சமர்ப்பிக்க உங்களை வரவேற்கிறது. இந்த கூட்டியக்கம் நம் கதைகளை பகிர்வதற்கான, ஆதரவான சமூகங்களை கட்டமைப்பதற்கான, மற்றும் அடக்குமுறைக்கு எதிரான பண்பாட்டு எதிர்ப்பலைகளை ஒழுங்கமைப்பதற்கான தளங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த கூட்டியக்கம் இருமொழி (ஆங்கிலம்/தமிழ்) சிற்றிதழ் மற்றும் வலைப்பதிவினூடே மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் தொடர்பான கதைகள், அனுபவங்கள், மற்றும் கனவுகளை பகிர்வதற்கான பாதுகாப்பான அனாமதேய வெளிகளை உருவாக்க முனைகின்றது. ஈழத்தமிழ் மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களென தங்களை அடையாளப்படுத்தும் அல்லது ஈழம், இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தற்போது கனடாவில் வாழ்கின்ற படைப்பாளிகளிடமிருந்து  இந்த சிற்றிதழ் மற்றும் வலைப்பதிவுக்கான படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம். உங்களது கதைகள், வரைகதைகள், கவிதைகள், ஓவியங்கள் அல்லது ஒலி/ஒளி ஊடகப் படைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன. 2015ம் ஆண்டு ஆனி மாதம் இவை வெளியிடப்படும்.

சில முன்மொழியப்பட்ட தலைப்புகள் (ஆனால் இதற்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை):–    குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட/மறுக்கப்பட்ட பாலியல்பு, பால்நிலை அடையாளம் மற்றும் வெளிப்படுத்துகை-    பரந்த மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர் சமூகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல்-    நம் சமூகங்களுக்கு உள்ளேயும், வெளியேயுமான தனிமைப்படுத்துதல், இனவாதம்-    தமிழ் சமூகங்களில் தோழமை

–    உடன்போக்கு, பாலுறவு, காதல் மற்றும் உறவுகள்

–    முரண்பாடு அத்துடன்/அல்லது புலம்பெயர்வு அல்லது புகலிட வாழ்வுடன் தொடர்புடைய மனவடு மற்றும் கூட்டு ஆற்றுப்படுத்துகை

எப்படி சமர்ப்பிப்பது:

அனைத்து வகையான படைப்புக்களும் தலைப்பு, படைப்பின் பின்புலம் (100 வார்த்தைக்களுக்குட்பட்டதாக) மற்றும் படைப்பாளியின் பெயர்/புனைபெயர் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் மூலம்whatwillpeoplesay@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். மின்னஞ்சல் தலைப்பில் What Will People Say சிற்றிதழுக்கான படைப்பு என்பதை குறிப்பிடவும்.*அனாமதேயமாக பங்குபற்ற விரும்புபவர்கள் உங்களை அடையாளப்படுத்தக்கூடிய தகவல்களை (உ+ம்: படைப்பில் இடம்பெறும் பெயர்கள்) நீக்கிவிடுங்கள்.அனைத்து படைப்புக்களும் வைகாசி மாதம் 1ம் திகதி இரவு 11:59க்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.எழுத்துமூலப் படைப்புக்கள்:

எழுத்துமூலப் படைப்புக்கள் 250 வார்த்தைகளுக்குட்பட்டதாக, ஏரியல் எழுத்துருவில் 12 அளவில், மைக்ரோசொப்ட் கோப்பாக இருத்தல் வேண்டும்.ஒலி/ஒளி ஊடகப் படைப்புக்கள்:ஒலி/ஒளி ஊடகப் படைப்புக்கள் மூன்று நிமிடங்களுக்குட்பட்டதாக இருத்தல் வேண்டும். இணைப்பு அல்லது கோப்பினை mp3 அல்லது wav (ஒலி ஊடகம்), 1920 x 1080க்குட்பட்ட mp4 அல்லது mov (ஒளி ஊடகம்) கோப்புகளாக அனுப்புங்கள்.

காட்சி ஊடகப் படைப்புகள்:

1920×1080க்கு உட்பட்ட jpg கோப்பாக இருக்க வேண்டும்.

இவற்றில் ஏதும் குழப்பங்கள், கேள்விகள் இருப்பின் எம்மைத் தொடர்புகொள்ளவும்.

மேலதிகத் தகவல்களுக்கு What will People Say கூட்டியக்கத்தை தொடர்புகொள்ளவும்:

Whatwillpeoplesay15@gmail.com
whatwillpeoplesaycollective.wordpress.com/

What will People Say ஒரு பன்முகத்தன்மை கொண்ட தமிழ் மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளமுள்ளோர் மற்றும் தோழர்களின் கூட்டியக்கம். இதன் உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் நேரிலும், இணையத்தினூடும் சந்திக்கின்றனர். நமது சமூகங்களின் மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளமுள்ளோருக்கான வெளிகளை உரையாடல்களினூடாகவும், கற்கைநெறிகளூடாகவும், ஒன்றுகூடல்களுக்கூடாகவும், இளைஞர்களையும், வயது முதிர்ந்தவர்களையும் இணைத்தவாறு உருவாக்குவது இந்தக் கூட்டியக்கத்தின் நோக்கமாகும்.